Saturday, April 30, 2011

அன்புள்ள தோழிக்கு.

எப்படி இருக்கிறாய்?
எங்கே இருக்கிறாய்?
எப்போது வருவாய்?
என் இதயம் துடிக்கும் போதெல்லாம்
உன்னைப்பற்றி எழும் கேள்விகள் இவை...
உன் விரலோடு விரல் கோர்த்து
விளையாடிய வீதிகள்
இன்று வெற்றிடமாய் தெரிகின்றன...
உன் எச்சில் மருந்தால்
ஆறிப்போன காயங்களின் தழும்புகள்
இன்று வலியால் துடிக்கின்றன...
உன்னோடு தோல் சேர்ந்த
என் சுக துக்கங்கள் அனைத்தும்
இன்று தனிமையில் தவிக்கின்றன...
புன்னகை பூ பூத்து
நட்போடு நடைபோட்டோம்
புத்திகேட்ட சமுதாயம் நம்மை
பிரிக்குமேன்றா எதிர்பார்த்தோம்?
அண்ணன் தங்கை வந்தாலே
அருவருப்பாக பார்க்கும் சமுதாயம்
நண்பர்களாய் நடைபோடும் நம்மைமட்டும்
ஆசையோடுவா பார்க்கப்போகிறது...
வீணர்களின் சொல்லுக்கு வெட்கப்பட்டு
விட்டில் பூச்சிபோல் துடிகவேண்டாமென
வெவ்வேறு திசை பிரிந்தோம்
வேரருவாத நம் நட்போடு...
விவேகத்தோடு எடுத்த நம் முடிவு
நட்பிற்கு நல்லது என்றாலும்
வெவ்வேறு வேளைகளில்
என்னை ரணமாய் கொள்கிறது...
நீ எத்திசையில் இருந்தாலும்
நம் நட்பெனும் சுவாசக்காற்று
எப்போதும் எங்கோ ஓரிடத்தில்
சந்திதுகொண்டு தான் இருக்கிறது...
கண்ணீர் வருமோ என்ற தயக்கத்தில்தான்
இதை எழுத துடங்கினேன்
துடைக்க உன் விரல் இல்லாதபோது நான்மட்டும் எப்படி
என்று கண்ணீரும் வரமறுக்கிறது....
உன் நினைவில் நான் எழுதும்
இந்த இனிய வேலையில்
என்னை நினைவில் நீயும் இருப்பாய்
என்ற நம்பிக்கையோடு....
*** நம் நட்பெனும் காற்றை சுவாசிக்கும் உன்

அம்மாவை ஒதுக்குகிறாய் நீ .. கொஞ்சம் பொறுத்திரு உன்னை ஒதுக்க வருகிறார்கள் உன் பிள்ளைகள்


இதயத்தை மாற்றலாம் !
இரத்தத்தை மாற்றலாம் !
நரம்புகளை மாற்றலாம் !
கல்லீரலை மாற்றலாம் !
சிறு நீரகத்தை மாற்றலாம் !
இவைகளை எல்லாம் மாற்றும்
விஞ்ஞானியால் தாயின் கர்ப்பப்பையை
அவளிடமிருந்து ஆணுக்கு மாற்ற இயலாது !
இதுதான் தாயின் சிறப்பு.

தாயின் கருவறையில்


இருட்டு வாழ்வில்..வெளிச்சமாய் வாழ்ந்தேன்..
தாயின் கருவறையில்..
(வெளி) வெளிச்சத்திற்கு வந்தும்..
சில குருட்டு ஜனங்களின்..
இருட்டு மனங்களைப் பார்த்து..
மனம் அழுது வடிக்கின்றது..
தாயே உன் கருவறை போல்..
பாதுகாப்பான அறையேதுமில்லை..
பாரினில் உன் போன்ற தெய்வம் வேறெதுவுமில்லை.-

அம்மா


இறைவன் படைத்த இவ்வுலகில்..இன்பமான அன்பைத் தந்து..இரு விழிகளால் இரவுகள் விழித்து..இறுதி வரை இவ்விரு கண்களால்.. காணக்கூடிய இறைவனது மறுவடிவம்....அம்மா...!!!!!!

Monday, April 18, 2011

என்ன விதி செய்தாய்

என்ன விதி செய்தாய் இறைவா
என் விழிகளுக்கு நீர் மட்டும் தான் உறவா ?
கனவாக கலைகிறதே நியங்கள் எல்லாம் - வேங்கை
குணமாகி போனதுவே மனித மனங்கள் எல்லாம்.............
.Enna Vithi cheythaay iraivaaEn Vilikalukku Neer Maddum Thaan UravaaKanavaakak Kalaikirathe Niyangkal Ellaam -VengkaiKunamaaki Ponathe Manitha Manngkal Ellaam...

இறைவனின்

புதிர் எல்லாம் புரிந்து போனால் பதில்கள் ருசிக்காது
நாளை புரிந்ந்து விட்டால் இன்று இனிக்காது
உலகோரு தொடர்கதை அதில் தினம் தினம் புதுக்கதை
இது இறைவனின் கற்பனை
விழி கலங்காமல் தடை உடை......
Puthir Ellaam Purinthuponaal Pathilkal Ruchikkaathu
Naalai Purinthuviddaal Inru Inikkaathu
Ulakoru Thodarkathai Athil Thinam Thinam Puthukkathai
Ithu Iraivanin Karpanai
Vili Kalangkaamal Thadai Udai.

என் விதியில்

என்ன நடக்குது என் விதியில்
ஏன் இந்த வலிகள் என் மனதில்
கல்லறை போகும் ஒரு நொடிக்குள்
எத்தனை காயத்தில் உயிர் துடிக்கும் - இப்படி
நித்தமும் உயிர் தீயில் வேகும் என்றால் -சத்தியமாய்
அன்றே என்னை கொண்டிருப்பேன் கருவறைக்குள்..............
Enna Nadakkuthu En Vithiyil
Ean Intha Valikal En Manathil
Kallarai Pokum Oru Nodikkul
Eththanai Kaayaththil Uyir Thudikkum - Ippadi
Niththamum Uyir Thiiyil Vekum Enraal - Chaththiyamaay
Anre Ennai Kondiruppen Karuvaraikkul.
HAVE ,TRUST 

TRUST
Trust should be like the feeling of a one year old baby
when you throw him in the air,he laughs
because he knows you will catch him;
that’s Trust

URAVU

 காரணம் சொல்லாமல் 
கலைந்து போக 
இது கனவும்" இல்லை
காரணம் சொல்லி 
பிரிந்து போக 
இது ஒன்றும் 
காதலும்" இல்லை
உயிருள்ளவரை 
தொடரும் 
உண்மையான உறவு........ KARANAM SOLLAMAL KALANITHU POGA ETHU ''KANAVUM '' ILLAI
KARANAM SOLLI PIRINTHU POGA ETHU ONRUM ''KATHALUM'' ILLAI 
UYYIR ULLA VARAI THODARUM UNMAYANA URAVU

தாய்மை எனும் ஓர் பேறு கொடுத்ததற்காய்... ஓராளாய் நின்று மூவுலகம் காட்டி எனக்கு முழுவதும் ஆனவள் ..என் அன்னை 

இளமையை உனக்காக ஈடு வைத்த உன் அம்மாவையும் அப்பாவையும் ஒதுக்குகிறாய் நீ .. கொஞ்சம் பொறுத்திரு .. உன்னை ஒதுக்க வருகிறார்கள் உன் பிள்ளைகள்

அம்மாவை ஒதுக்குகிறாய் நீ .. கொஞ்சம் பொறுத்திரு உன்னை ஒதுக்க வருகிறார்கள் உன் பிள்ளைகள்

தாயே கடவுள்

கடவுளைத் தேடித் தேடி
தேய்ந்து போனது
கால்கள்!
காண முடியாமல்
காய்ந்து போயின
கண்கள்!
இறுதியில்
இமைகளை
மூடிக் கொண்டு
தேடினேன்!
ஞானம் பிறந்தது...
பத்து மாதங்களாய்
கருவறையில் காத்து
பெற்று வளர்த்த
தாயே கடவுள்..!

Sunday, April 17, 2011

அன்பைத் த‌விர

தன் ஊமை மகனின் மௌனத்திலும்
இசையை ரசிக்கும் தாய்மையே!
உன்னைத் தவிர உனக்கு ஏது ஈடு? உன்
அன்பைத் த‌விர உயர்ந்ததேது கூறு

அம்மா

அன்பு என்றால் அம்மா
ஆறுதல் தருபவள் அம்மா
இரத்தத்தை பாலாக்கி தந்தவள் அம்மா
ஈகை விளக்கியவள் அம்மா
உயிரைக் கொடுப்பவள் அம்மா
ஊழ் உரைத்தவள் அம்மா

உனை காப்பேன் அம்மா


பாசம் என்பது வேசம் இன்றி...

நீ..நான்.. ஏன் அனைத்து ஜிவனும்...

பெற முடிந்த‌ ஒறே இட‌ம் தாயிட‌ம் ம‌ட்டுமே...

அம்மா என்று சொல்லி பார்...

நீ க‌ட‌வுளை உண‌ர்வாய்...

நீ தூய‌வ‌ன் ஆணாய்...

பாச‌ம் என்பதின் தொட‌க்க‌ம் நீ அம்மா...

எனக்கு நோய் துன்ப‌ம் எது வந்தாலும்...

உன் ம‌டியில் என் த‌லை வைத்து...

உறங்கிய போது ம‌றைந்தது...

நீ ம‌று ஜென்மம் கண்டு...

என் ஜ‌ன‌ன‌ம் த‌ந்தாய்...

அன்று முத‌ல் இன்று வ‌ரை...

உன் பாச‌ம் ச‌லிக்க‌வில்லை...

நட்பு காத‌ல் இங்கும் நாம் தேடுவ‌து...

நீ தந்த‌ அதே அன்பு ம‌ட்டுமே...

நான் சேயான‌ போது தாயாகி...

இன்று வ‌ரை எனை காத்தாய்...

நீ சேயாகும் போது நான் தாயாகி...

உனை காப்பேன் அம்மா...

பிரிப்பதற்கு..

பிரியாமல் இருப்பதற்காய் பிரிவை வரமாய் கேட்கிறேன்,
பிரிவால் கூட முடியாதம்மா
என்னிடம் இருந்து உன்னை
பிரிப்பதற்கு..
முன்னூறு நாள்
மூச்சிளைக்க எனைச்சுமந்து
முந்தானை தனிலே எனைமுடித்து
அறுசுவை ஊட்டி என்னை
ஆவலாய் வளர்த்தாள்.

ஆண்டுகள் பல கடக்க
அன்பாய் என்னை ஆழாக்கினாள்
ஆனந்தமூட்டி என்னை
அன்போடு வளர்த்தெடுத்தாள்.

பசித்தபோது பக்குவமாய்
பணிவோடு பருகூட்டுவாள்
தன்வயிறு பொத்தி என்
வயிற்றை வளர்த்திடுவாள்.

பள்ளிநான் செல்ல
பல கஷ்டம் பட்டிடுவாள்
பாரினிலே பலகாலம் நான் வாழ
பலதவம் புரிந்திடுவாள் என் அன்னை...

என் அம்மா.

உலகில் உள்ள எல்லா சொந்தங்களையும் எனக்கு அறிமுகபடுத்திய ஒரு அழகான முதல் சொந்தம் என் அம்மா....!!!!

Saturday, April 16, 2011

தெய்வமில்லை.

தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை
தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால் வேறொறு தெய்வமில்லை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...