Saturday, April 30, 2011

அன்புள்ள தோழிக்கு.

எப்படி இருக்கிறாய்?
எங்கே இருக்கிறாய்?
எப்போது வருவாய்?
என் இதயம் துடிக்கும் போதெல்லாம்
உன்னைப்பற்றி எழும் கேள்விகள் இவை...
உன் விரலோடு விரல் கோர்த்து
விளையாடிய வீதிகள்
இன்று வெற்றிடமாய் தெரிகின்றன...
உன் எச்சில் மருந்தால்
ஆறிப்போன காயங்களின் தழும்புகள்
இன்று வலியால் துடிக்கின்றன...
உன்னோடு தோல் சேர்ந்த
என் சுக துக்கங்கள் அனைத்தும்
இன்று தனிமையில் தவிக்கின்றன...
புன்னகை பூ பூத்து
நட்போடு நடைபோட்டோம்
புத்திகேட்ட சமுதாயம் நம்மை
பிரிக்குமேன்றா எதிர்பார்த்தோம்?
அண்ணன் தங்கை வந்தாலே
அருவருப்பாக பார்க்கும் சமுதாயம்
நண்பர்களாய் நடைபோடும் நம்மைமட்டும்
ஆசையோடுவா பார்க்கப்போகிறது...
வீணர்களின் சொல்லுக்கு வெட்கப்பட்டு
விட்டில் பூச்சிபோல் துடிகவேண்டாமென
வெவ்வேறு திசை பிரிந்தோம்
வேரருவாத நம் நட்போடு...
விவேகத்தோடு எடுத்த நம் முடிவு
நட்பிற்கு நல்லது என்றாலும்
வெவ்வேறு வேளைகளில்
என்னை ரணமாய் கொள்கிறது...
நீ எத்திசையில் இருந்தாலும்
நம் நட்பெனும் சுவாசக்காற்று
எப்போதும் எங்கோ ஓரிடத்தில்
சந்திதுகொண்டு தான் இருக்கிறது...
கண்ணீர் வருமோ என்ற தயக்கத்தில்தான்
இதை எழுத துடங்கினேன்
துடைக்க உன் விரல் இல்லாதபோது நான்மட்டும் எப்படி
என்று கண்ணீரும் வரமறுக்கிறது....
உன் நினைவில் நான் எழுதும்
இந்த இனிய வேலையில்
என்னை நினைவில் நீயும் இருப்பாய்
என்ற நம்பிக்கையோடு....
*** நம் நட்பெனும் காற்றை சுவாசிக்கும் உன்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...