Monday, May 16, 2011

கையடக்க தொலைபேசியில் தமிழ் இணையத்தளங்களை பார்க்க.

தமிழ் தளங்களின் எழுத்துருபிரச்சினையைதீர்ப்பதற்கான வழிமுறைஇதோ&&.

1. உங்கள் கையடக்க செல்லிட தொலைபேசியில் ( mobile phone) GPRS வசதியை உயிர்ப்பித்து(Active) கொள்ளவும்.
2. கையடக்க தொலைபேசி மூலம் http://www.opera.com/mini/ இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினியை தரவிறக்கி ( Download) உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.

3. கையடக்க தொலைபேசியில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை ( browser) திறந்து கொள்ளுங்கள்.
4. பின்பு முகவரி இடும் இடத்தில் (Address Bar) opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.

5. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
(if enabled, text written with complex scripts will be rendered on the server instead of in your device.)

6. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

இனி உங்கள் கையடக்க தொலைபேசியில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றி பார்க்கலாம்.

Saturday, May 7, 2011

இளைஞனே


இளைஞனே…
முகத்தில் கண்ணில்லா எறும்புகளே
முகர்ந்து கொண்டே
முன்னோக்கி சென்று
உறுதியோடு
உழைத்துக்கொண்டிருக்கிறது !
பார்வையிருந்தும்
பாதையை தேடாமல் நீ !
பயணத்தை தொடங்குவது எப்போது ?
வானம் வந்துனக்காய்
வளைந்து கொடுக்காது !
முயன்றால் நீ
வானளவு
உயர்ந்து நிற்கலாம்

Sunday, May 1, 2011

நீ பார்க்க மாட்டாய் என்றாலும்

நீ பார்க்க மாட்டாய் என்றாலும்உனக்குப் பிடித்த ஆடைகளையே தேர்வு செய்யும் என் கரங்களுக்கும்,

நீ அழைக்கமாட்டாய் எனத் தெரிந்தும் அடிக்கடி அலைபேசியை நோக்கும் என் கண்களுக்கும்,

நீ பேசும் சில வார்த்தைகளையும் நிரப்பி பூட்டிக் கொள்ள முயலும் என் செவிகளுக்கும்

உன்னைத் தெரியாதவர் எனத்தெரிந்தும் அவரிடமும் உன்னைப் பற்றியே பேசும் என் இதழ்களுக்கும்

கடிவாளம் போட நீ வரும் நாள் எப்போது
:

மெல்லிய பூவின் மடியில்

மெல்லிய பூவின்மடியில் மற்றொரு பூஅள்ளி அணைத்ததில் காட்டியது தாயன்புஎன்னை மெய்சிலிர்க்க வைத்தது அரவணைப்பு...உன்னை காண்கையில் எனக்கொரு பூரிப்புஉன்னை கண்டதும் மனதில் தோன்றியது மதிப்புஉன்னை வார்த்தையில் வர்ணிப்பது எனக்கும் சிறப்பு..அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்......?என் உள்ளத்திலிருக்கும் அன்பிடம் உன் நினைவுகளைஅடை காக்கும் கதவுகளுக்கானதாழ்தான் இருக்கிறது.கனவாக..காற்றாக..வெயிலாக..துயிலாக..இரவாக..பகலாக..எதிலும் - உன் நினைவாகஇருக்கச் செய்தவனே..உன்னில் மட்டும் - நான்கானலாக இருப்பது ஏன்?

Saturday, April 30, 2011

அன்புள்ள தோழிக்கு.

எப்படி இருக்கிறாய்?
எங்கே இருக்கிறாய்?
எப்போது வருவாய்?
என் இதயம் துடிக்கும் போதெல்லாம்
உன்னைப்பற்றி எழும் கேள்விகள் இவை...
உன் விரலோடு விரல் கோர்த்து
விளையாடிய வீதிகள்
இன்று வெற்றிடமாய் தெரிகின்றன...
உன் எச்சில் மருந்தால்
ஆறிப்போன காயங்களின் தழும்புகள்
இன்று வலியால் துடிக்கின்றன...
உன்னோடு தோல் சேர்ந்த
என் சுக துக்கங்கள் அனைத்தும்
இன்று தனிமையில் தவிக்கின்றன...
புன்னகை பூ பூத்து
நட்போடு நடைபோட்டோம்
புத்திகேட்ட சமுதாயம் நம்மை
பிரிக்குமேன்றா எதிர்பார்த்தோம்?
அண்ணன் தங்கை வந்தாலே
அருவருப்பாக பார்க்கும் சமுதாயம்
நண்பர்களாய் நடைபோடும் நம்மைமட்டும்
ஆசையோடுவா பார்க்கப்போகிறது...
வீணர்களின் சொல்லுக்கு வெட்கப்பட்டு
விட்டில் பூச்சிபோல் துடிகவேண்டாமென
வெவ்வேறு திசை பிரிந்தோம்
வேரருவாத நம் நட்போடு...
விவேகத்தோடு எடுத்த நம் முடிவு
நட்பிற்கு நல்லது என்றாலும்
வெவ்வேறு வேளைகளில்
என்னை ரணமாய் கொள்கிறது...
நீ எத்திசையில் இருந்தாலும்
நம் நட்பெனும் சுவாசக்காற்று
எப்போதும் எங்கோ ஓரிடத்தில்
சந்திதுகொண்டு தான் இருக்கிறது...
கண்ணீர் வருமோ என்ற தயக்கத்தில்தான்
இதை எழுத துடங்கினேன்
துடைக்க உன் விரல் இல்லாதபோது நான்மட்டும் எப்படி
என்று கண்ணீரும் வரமறுக்கிறது....
உன் நினைவில் நான் எழுதும்
இந்த இனிய வேலையில்
என்னை நினைவில் நீயும் இருப்பாய்
என்ற நம்பிக்கையோடு....
*** நம் நட்பெனும் காற்றை சுவாசிக்கும் உன்

அம்மாவை ஒதுக்குகிறாய் நீ .. கொஞ்சம் பொறுத்திரு உன்னை ஒதுக்க வருகிறார்கள் உன் பிள்ளைகள்


இதயத்தை மாற்றலாம் !
இரத்தத்தை மாற்றலாம் !
நரம்புகளை மாற்றலாம் !
கல்லீரலை மாற்றலாம் !
சிறு நீரகத்தை மாற்றலாம் !
இவைகளை எல்லாம் மாற்றும்
விஞ்ஞானியால் தாயின் கர்ப்பப்பையை
அவளிடமிருந்து ஆணுக்கு மாற்ற இயலாது !
இதுதான் தாயின் சிறப்பு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...